பாறையில் பல கனிமங்கள் இருக்கும் அதில், அடர்த்தி அதிகம் மற்றும் வேதியியல் மாற்றத்தை எதிர்க்கும் தன்மையுள்ள (Chemically Resistant) திண்கனிமங்கள் (Heavy Minerals) எந்த வித மாற்றமும் இன்றி வண்டலாக (Sediments) மாறி ஈர்ப்பு விசை மற்றும் ஆற்றின் போக்கால் அடித்து செல்லப்படும். அவ்வாறு அடித்து செல்லக் கூடிய கனிமங்கள் ஆற்றங்கரை ஓரமாகவோ அல்லது கடற்கரையிலோ சேரும். ஒரு பாறையில் அங்கங்கே சிதறி கிடந்த திண் கனிமங்கள் எல்லாம் இயற்கையின் விளையாட்டால் ஒரு சேர சேர்ந்துள்ளது. அதனை Placer Deposit என கூறுவர் அதனோடு அடர்த்தி குறைவான சின்னஞ்சிறு கனிமங்கலும் இருக்கும். அந்த Deposit-யை ஜலித்து எடுத்தால் அந்த திண் கனிமத்தை பிரித்துவிடலாம்.
தங்கத்தின் அடர்த்தி அதிகம் அதே போல் அது வேதியியல் மாற்றமும் அடையாது எனவே அது placer deposit ஆக ஆற்றங்கரை ஓரம் சேரும். சாதாரணமாக தங்கம் ஒரு பாறையில் இருக்கிறது என்றால் ஆங்காங்கே சிதறி தான் இருக்கும். ஒரு டன் பாறையில் ஒரு சில கிராம் தான் தங்கம் கிடைக்கும். இயற்கையின் விளையாட்டால் இப்பொழுது placer deposit தங்கம் ஒரு சேர சேர்ந்திருக்கும்.
19-ஆம் நூற்றாண்டின் நடுவில் California மாகாணத்தில் இவ்வாறு கிடைக்கும் தங்கம் கண்டறியப்பட்டது. எனவே மக்கள் அனைவரும் அங்கே கூடி சண்டை போட்டு பிரித்து எடுத்தனர். அதனை CALIFORNIA GOLD RUSH என கூறுவர்.
இந்தியாவிலும் கூட சில இடங்களில் இவ்வாறு placer deposits கிடைக்கிறது ஆனால் இங்கோ சட்டமே வேறு!! மண்ணிற்கு/நிலத்திற்கு கீழே எது கிடைத்தாலும் அது அரசாங்க கஜானாவையே சேரும்!!!
இப்பொழுது பல நவீன உபகரணங்கள் கொண்டு திண் கனிமங்களை பிரித்து எடுக்கின்றனர்.
இதே போல் வைரமும் (Diamond) கிடைக்கும் Placer Deposit ஆக !!