நம் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகளை நம்மால் கணிக்க முடியும் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் எந்த தேதி, எத்தனை மணிக்கு பிறந்தது என்பதை நம்மால் அறிய முடியும். இதுவே அக்குழந்தை வளர்ந்து வயது மூப்பினால் இறந்தாலோ அல்லது கொலை செய்யப்பட்டு பல நாள் கழித்து உடல் கிடைத்தால் கூட எப்பொழுது உயிர் பிரிந்தது என மருத்துவர்களால் கணிக்க முடியும் பிணக்கூறு (POST-MORTEM ) ஆய்வின் படி உடல் எந்த அளவு சிதையுற்றுள்ளது என்பதை வைத்து கூற இயலும்.
இதே வரலாற்றை எடுத்துக்கொண்டால் கல்வெட்டுகள், குறிப்புகள், நாணயங்கள், கோவில்கள், இவைகளை வைத்து ஒரு மன்னனை பற்றியும் அவன் ஆட்சி முறை பற்றியும் அறியலாம். தொல்பொருள்களை தொல்பொருள் வல்லுநர்கள் கதிரியக்கக்கரிம அளவைமுறை (RADIO-CARBON DATING METHOD) மூலம் அதனுடைய காலத்தினை கண்டறிவர்.
இதெல்லாம் மனித இனம் விட்டுச்சென்ற குறியீடுகள் மூலம் கண்டறியப்பட்டது. ஆனால் பூமியின் அகவை 4.54 பில்லியன் வருடங்கள் ஆகும்.
அதனை எப்படி கண்டுபிடித்தனர்?
பூமி உருவாகி இன்றைய காலகட்டம் வரை நடைபெற்ற சம்பவங்களை அதனுடைய வரம்பு அளவுகள் வைத்து ஒரு வருடகாலத்தினுள் பிரித்தால் மனித இனம் உருவாகியது வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31 இரவு 11.36 மணிக்கு தான்.
பூமியில் தோன்றும் பாறைகளில் கதிரியக்க தனிமங்கள் (RADIO-ACTIVE ELEMENTS) இருக்கும் அவை ஒவ்வொரு பாறைகளில் ஒரு குறிப்பிட்ட தரநிலையில் (STANDARD) இருக்கும். ஒரே அணுவெண்ணையும், வேறுபட்ட திணிவெண்ணையும் கொண்ட அணுவை ஓரிடத்தான்(ISOTOPES) என கூறுவர். அதில் சில ஓரிடத்தான் நிலையற்றதாக இருக்கும். அது கதிரியக்கத்தின் மூலம் நிலையானதாக மாறும். அப்போது கதிரியக்க அளவை முறை மூலம் கதிரியக்க ஓரிடத்தனிமத்தின் அளவையும் அதன் சிதைவினால் உருவான விளைப்பொருட்களின் அளவையும் (DAUGHTER CELLS) ஒப்பிட்டு வயதினை கண்டறிவர். இவ்வாரே பூமியின் வயது பாறைகளின் வயது தொல்பொருள்களின் வயது என ஆய்வாளர்கள் கண்டறிவர்.
கண்டறியும் முறை
கோன்ட்ரைட் (CHONDRITE) என்ற பாறை உருவாகும் பொழுது யூரேனியம் என்ற தனிமமும் அதில் உருவாகியது. ஆனால் அது ஒரு நிலையற்ற கதிரியக்க தனிமமாகும். அது கதிரியக்கம் (RADIATION) மூலம் ஈயம் (LEAD) ஆக மாறியது. அவ்வாறு மாற 4.54 பில்லியன் வருடங்கள் ஆகும். அவ்வாறு ஒரு கோன்ட்ரைட் பாறையில் இருக்கும் யூரேனியம் மற்றும் ஈயம் வைத்து தான் பூமியின் வயதினை கண்டறிந்தனர்.
நன்றி
https://biomimicry.net/earths-calendar-year-4-5-billion-years-compressed-into-12-months/
https://en.wikipedia.org/wiki/Radiometric_dating

No comments:
Post a Comment