மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டு , டெல்டா பகுதியினை நீர் சென்றடைந்தது...
காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மீத்தேன் எரிவாயு திட்டம் எதிர்த்து போராட்டம்...
இப்படி செய்திகளில் டெல்டா என்ற வார்த்தையை அடிக்கடி கண்டிருப்போம் அல்லவா ....
டெல்டா என்றால் என்ன? எவ்வாறு உருவாகிறது?
மலையில் பிறக்கின்ற ஆறு, தான் செல்லும் பாதையை தாமே உருவாக்கி, அதன் எதிரில் உள்ள தடைகளை எல்லாம் தகர்த்து அதனையும் தன்னுடன் சேர்த்து ஓட்டமாய் ஓடி மலையை கடந்து சமதள பகுதியை அடைந்து அதனை வளைந்தும் நெளிந்தும் கடந்து தன் சக்தியை இழந்து கடலில் போய் சேரும். அவ்வாறு கடலில் போய் சேரும் முன் தன்னுடன் அடித்து கொண்டுவரப்பட்ட மணல்கள் அனைத்தையும் விட்டுச்செல்லும் அவ்வாறு படியும் மணல் கணிதத்தில் வரும் Δ டெல்டா குறியீடு போல் பிரிந்தும், விரிந்தும் அமையும். எனவே தான் அதனை டெல்டா நிலப்பரப்பு என்கிறோம். தமிழில் கழிமுகம் என கூறுவர் ....
Source :Wiki
எகிப்து நாட்டில் ஓடும் நைல் நதி மத்திய தரை கடல் பகுதியில் கலக்கும் பொழுது இந்த வடிவம் கண்டறியப்பட்டது எனவே அதற்கு தான் முதலில் டெல்டா என்ற பெயர் உருவானது...

Arumaiyana padhivu👍
ReplyDeleteSuper Anna
ReplyDelete